யாழில் கோர சம்பவம் சற்றுமுன் படகு விபத்தில் இளைஞன் பலி

Sentamil Admin

 



 படகு விபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் சுண்டிக்குளத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்று கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம் பெற்றது

அண்மைய நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள கடல் பகுதியிலும் கடும் காற்றுடன் நிலவியது

இதன் போது மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது 

சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.