அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை-சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

Sentamil Admin

 


அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அவர் 2021-ம் ஆண்டு பதவியேற்றதும் தனது முதல் சுதந்திர தின உரையில் ‘மாத்ரி பித்ரி வந்தனா’ திட்டத்தில் பெற்றோருடன் அரச ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் நவம்பர் 14, 15ஆம் திகதிகளில் அரச ஊழியர்கள் விசேட தற்செயல் விடுப்பை பெற அரச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை அதற்கான வழிகாட்டலின் அனுமதியுடன் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில் மாநில ஆளுநரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.