சற்று முன் மாணவர்களுக்கு வெளியான பெரு மகிழ்ச்சி தகவல்..!

Sentamil Admin

 


2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, தேசிய போட்டி விலை மனு முறைமையைக் கடைப்பிடித்து விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 29 நிறுவனங்கள் விலை மனுக்களைச் சமர்ப்பித்துள்ளன. உயர்மட்ட பெருகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, 3,491.47 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 29 நிறுவனங்கள் மூலம் 366 பாடப் புத்தகங்களின் 25.49 மில்லியன் பிரதிகளை அச்சிடுவதற்குப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.