மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆறு பெண்கள் உட்பட 7 பேர் மிரிஹான பொலிஸாரால் புதன்கிழமை (12) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்களில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட நான்கு பெண்களும் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளர்கள் இருவரும் ஆணொருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, பொலன்னறுவை, மஹியங்கனை மற்றும் கிராந்துருகோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களும் 47 வயதுடைய ஆணும் ஆவர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Notification texts go here... Link
Reach out!
