சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் முக்கிய சந்தேக நபர் கைது

 


பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்த்து.


சடலமாக மீட்கப்பட்டவர் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா ஆவார். அதேவேளை பெண் கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே யாழ்ப்பாண மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வவுனியா செல்வதாக கணவரிடம் பெண் கூறிசென்ற நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post