மெக்சிகோவில் விமான விபத்து 10 பேர் பலி
மெக்சிகோ மாநிலத்தின் தலைநகரின் கிழக்கில் உள்ள டோலுகா விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த விமானியும் துணை விமானியும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு விமானத்தில் பயணித்த மேலும் எட்டு பேரும் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
