இவ்வாண்டு வாகன இறக்குமதியில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Sentamil Admin

 


கடந்த ஆண்டை விட வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத்துறையின் ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வாகன இறக்குமதியில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருவாய் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் கடந்த ஆண்டை விட வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.