நுவரெலியாவில் பரிதாப விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்!

Nila

 

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 💔

🚗 பலாங்கொடை பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று, பொகவந்தலாவை 51ஆம் கம்பி பகுதியில் சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

❗ இந்த விபத்தில்

👉 சம்பவ இடத்திலேயே ஒருவரான ஆண் உயிரிழந்துள்ளார்

👉 சாரதி உட்பட இரண்டு பெண்கள் என மூவர் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 🏥

👮‍♂️ இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

⚠️ மலைப்பகுதிகளில் பயணம் செய்யும் போது அதிக கவனம் அவசியம்!