ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் சீரான இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், மே 2026-இல் செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடையப்போகிறார்.
நீதி மற்றும் கர்ம வினைகளுடன் தொடர்புடைய கிரகமான சனிபகவானின் பலவீனமனமான ராசியாக மேஷ ராசி கருதப்படுகிறது. மே 11, 2026 அன்று பிற்பகல் சுமார் 12:47 மணியளவில், செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த கிரக மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இதன் விளைவாகச் சில ராசிக்காரர்கள்நேர்மறையான பலன்களை அனுபவிப்பார்கள் என்றும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரக மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான பலன்களை அடையப் போகிறார்கள். இந்த மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றி, செல்வம் மற்றும் வாய்ப்புகள் தேடிவரலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இந்த காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நிலவி வந்த பழைய பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்படலாம். பல முடிக்கப்படாத விஷயங்களை இப்போது சரியாக முடிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும்
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். பல்வேறு புதிய வழிகளிலிருந்து அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும். திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
