அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Nila

 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.     

குறித்த விடத்தை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொத்தவலகெதர தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பயனாளிகளின் தகைமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தரவுச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வுகள் மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.இதேவேளை நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே மோசடியான முறையில் நன்மைகளைப் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அந்த நிதியை அறவிடுவதற்கும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பயனாளிகளின் தகைமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தரவுச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வுகள் மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.தகவல்களை இற்றைப்படுத்தும் (Update) பணிகளைச் சீராக முன்னெடுக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டு முதலாம் கட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுக் காலம் ஜூன் மாதம் வரை விசேடமாக நீடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுகள் மற்றும் தரவுச் சரிபார்ப்புகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த பின்னர், தகுதியுடைய பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.