குரு நட்சத்திர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறுப்போகும் ராசிகாரர்கள் இவர்கள்தான்

 

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி சுப கிரகமாக கருதப்படும் குருவின் பார்வை பட்டாலே அந்த ராசிக்காரர் வாழ்க்கையில் உச்சம் பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இவரின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 20ஆம் திகதி அதிகாலை 4:43 மணியளவில் அவர் புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியானார். இந்த நட்சத்திரத்தில் அவர் மே 14-ஆம் திகதி வரை பயணிக்க இருக்கிறார். குரு பகவான் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதகமான பலன்களை அளிக்கும்.

மிதுனம்: குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். உங்கள் தொழில் அல்லது வேலையில் புதிய திசைகள் கிடைக்கும் தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் இருந்த மந்த நிலை விலகி வியாபாரம் சூடு பிடிக்கும். நிதி ரீதியாக நன்மைகள் கிடைக்கும்.மனம் அமைதி பெறும். 

கடகம்: குரு பகவானின் நட்சத்திர மாற்றமானது கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கவுள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியங்களைப் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். திடீர் பணவரவால் வங்கி இருப்பு உயரும். குடும்பத்தின் பொருளாதார நிலைமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என இரண்டிலும் சாதகமான காலகட்டம் கிடைக்க இருக்கிறது. நீண்ட காலமாக நீங்கள் சந்தித்து வந்த இடர்பாடுகள், குடும்ப தகராறுகள், ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக விலகி வாழ்வில் புதிய ஸ்திரத்தன்மை ஏற்படும். தொழில் இருந்த தடைகள் அகலும். திருமணம் ஆகாமல் தடை இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக நடந்த சதிகளை முறியடிப்பீர்கள். வேலையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும்.

துலாம்: குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. மனச்சோர்வு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்கள் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயருக்கு ஏற்பட்டிருந்த களங்கமும், உங்களை துரத்திய துன்பமும் மாறத் தொடங்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். செ சுக போகங்கள் பெருகும். 

தனுசு: குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும், சுப பலன்களை அளிக்க கூடியதாகவும் அமையும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளும் சாதகமான சூழலும் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். சொத்து சேர்க்கை நடைபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் பெறுவீர்கள். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் நற்பெயர் உயரும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post