கல்வி நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 

அரசு வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "வெசாக் வாரத்தில்", பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 26 ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவித்து, அந்த காலப்பகுதியில் உரிய நிகழ்ச்சிகளை கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இந்த சுற்றுநிருபத்தின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

2026 மே 30 ஆம் திகதி வெசாக் தினம் அமையப்பெற்றுள்ள நிலையில், இம்முறை அரசு வெசாக் விழாவை மே 27 ஆம் திகதி மாத்தறை, திஹகொடையில் உள்ள மிதெல்லவல புராதன விகாரையில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் என்பன ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இதற்கு இணையாக கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வழிகாட்டல்களையும், முன்மொழியப்பட்ட மாதிரித் திட்டத்தையும் அமைச்சு சமர்ப்பித்துள்ளது.

அந்தந்த பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post