தான் வாங்கிய சாரயத்தில் கலப்படம் உள்ளதாக கூறி பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்தவருக்கு நேர்ந்த கதி..!

 

காலி, மிலித்துவ பகுதியில் வசிக்கும் ஒருவர், தான் வாங்கிய கள்ளச்சாராயம் தரமற்றது மற்றும் அதில் ஏதோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசி மூலம் புகார் ஒன்றை அளித்த சம்பவம் தொடர்பாக, காலி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகும் திகதி வழங்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, சாராயத்துடன் இந்த நபரை கைது செய்துள்ளனர்.