கடவு சீட்டு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னர் தினமும் 1,200 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் 4,000 கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதெனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், துறைக்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய அதிகாரிகள் விரைவில் திணைக்களத்தில் உள்வாங்கப்படுவார்கள்.

குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயற்பட்டு வருகின்றது.

கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் தற்போது அதிக எண்ணிக்கையிலான புதிய கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றன” என்றார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post