இந்த வாரம் இந்த ராசிகளுக்கு வேற லெவலாம்..!

 

5 ராசிக்கு வெற்றி, புகழ் அதிகரிக்கும்

2 முதல் 8 ஜூன் 2025 வரையிலான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், சில முக்கிய கிரக பெயர்ச்சி, சேர்க்கை நடக்க உள்ளன. குறிப்பாக ரிஷபத்தில் சூரியன் - புதன் சேர்க்கை காரணமாக பாஸ்கர யோகம் உருவாகிறது. தொடர்ந்து புதன் சொந்த ராசியான மிதுனத்திற்கு மாறுவதும் குருவுடன் இணையவும் உள்ளார். இந்த வாரத்தில் எந்தெந்த ராசிக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும் என விரிவாக பார்ப்போம்.

ரிஷபம் அதிர்ஷ்ட வார பலன்

ரிஷப ராசிக்கு வார தொடக்கம் மங்களகரமானதாக இருக்கும். திட்டமிட்ட வேலையில் வெற்றியுடன் நிறைவடையும், இது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடு செயல்திறன் சிறக்கும். பணியிடத்தில் பெண்கள் மரியாதை பெறுவார்கள். வணிகம் தொடர்பான செயல்பாடுகள் பயனுள்ளதாக, லாபத்தை தருவதாக இருக்கும்.

புதிய வருமான வாய்ப்பால் லாபம் தோன்றும். எந்த புதிய திட்டங்களை செயல்படுத்தினாலும், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அது வெற்றி பாதையை தரும். வாரத்தின் பின்பகுதியில் செயலில் ஆக்ரோஷத்தை விடவும்.

குடும்பத்திலும், பணியிடத்திலும் உறவு பாதிக்கலாம். காதலில் புரிதல் இருக்கும், உறவு ஆழமடையும்.உறவு இனிமையாக, திருப்தி தரும். அதனால் இந்த வாரம் முன்னேற்றம் தரும்.

சிம்ம அதிர்ஷ்ட வார பலன்

சிம்ம ராசிக்கு மன நிறைவை தரும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூல நல்ல செய்தி கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியால் நிரம்பும். வீடு, சொத்து தொடர்பாக விருப்பங்கள் நிறைவேறும். சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.வேலை, வணிகத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் பயனுள்ள விஷயங்கள் நடக்கும். வெற்றி தேடி வரும். உங்கள் திட்டங்களைச் சரியான வகையில் முன்னோக்கி நகர்த்த முடியும்.

வார இறுதியில், உங்கள் வீட்டின் அலங்கரிக்க, அல்லது புதுப்பிக்கப் பணம் செலவிடுவதில் சிந்திக்கலாம். வீட்டின் சூழல் இன்னும் அழகாக மாறும். இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். துணையுடன் உணர்வு ரீதியாக இணைந்திருப்பீர்கள்.

துலாம் வார அதிர்ஷ்ட பலன்

ஜூன் 2025 மாத முதல் வாரத்தில் அதிர்ஷ்டமும், நேர்மறை எண்ணங்களும் நிறைந்ததாக இருக்கும். முன்னர் செய்த முயற்சிகள் மூலம் பலனடைவீர்கள். சரியான நேரத்தில் வேலை முடித்து கவலைகள் நீங்கும். அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். கவலைப்பட்ட பணிகளை சரியாக செய்து முடிக்கலாம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு தேவை. பணியிடத்தில் இடமாற்றம் கிடைக்கலாம். உங்களின் காத்திருப்பு முடியும். வேலை மாறவும், கூடுதல் வருமான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி நிலை வலுவாக இருக்கும்.

வார நடுவில் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் பெரியவர்களின் உதவியால் நீங்கும். உறவு இனிமையாகும். காதல் துணையுடன் நேரத்தை செலவிடலாம். உறவில் முன்னேற்றம், சமநிலை பிறக்கும்.

கும்ப ராசி வார அதிர்ஷ்ட பலன்

ஜூன் முதல் வாரத்தில் கும்ப ராசிக்கு பலவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் செயலால் நிலைமை சமநிலையாகி வெற்றி கிடைக்கும். புத்திசாலித்தனமாகவும், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் பல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கு நன்மை கிடைக்கும். பயணங்களால் புதிய நட்பு கிடைக்கும். வணிகத்தில் லாபம் கிடைக்கலாம். முயற்சிகள் பலனளிக்கக்கூடியதாக மாறும்; வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு அதிகரிக்கும்.

வார நடுவில் புதிய திட்டங்கள், கூட்டணிகள் உருவாகும். முதலீடு செய்ய வாய்ப்புகள் உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் நலம் விரும்பிகள், அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுதல் நல்லது. அவசர முடிவு தீங்கு விளைவிக்கும். உணர்ச்சி ரீதியாக செயல்பட வேண்டாம். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது, அது நன்மை பயக்கும் மற்றும் இனிமையானதாக இருக்கும். காதல் விஷயம் சாதகமாக இருக்கும்.

மீனம் வார அதிர்ஷ்ட பலன்

மீன ராசிக்கு இந்த வாரம் நன்மைகள் கிடைக்கும். ஜூன் முதல் வாரத்தில் மீனத்திற்கு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் சூழ்நிலை சிறக்கும். அன்பும், புரிதலும் ஆழமாகும். வெளிநாட்டு தொழில், வணிக திட்டங்களால் சிறப்பான நிவாரணம் கிடைக்கும். தொழில், வணிகம் தொடர்பான திட்டமிட்ட வேலைகள் வெற்றி அடையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் பிறரின் தலையீட்டால் சமாதானம் ஆகும்.

வார நடுவில் மேற்கொள்ளும் பயணங்கள் நன்மை பயக்கும். சமூகத்தில் நற்பெயர், மரியாதை அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக உழைப்பீர்கள். அரசு துறையில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க நல்ல அறிகுறிகள் உண்டு. இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். திருமண முன்மொழிவுகள் வரக்கூடும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post