இலங்கையில் பயங்கரம்-இருவர் வெட்டி கொலை..!

 பூநகரி மற்றும் கலவானை பொலிஸ் பிரிவுகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் கொலைகள் நேற்று (31) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இரு குழுக்களுக்கு இடையேயான நீண்டகால தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். 

பூநகரி பொலிஸ் பிரிவின் தம்பிராய் பகுதியில் இந்தக் கொலை நடந்துள்ளது. 

இறந்தவர் செம்பங்குன்று பூநகரி பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், கலவானை பொலிஸ் பிரிவில் ஹெட்டிகந்த பகுதியில் உள்ள வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கலவானை - நாவலகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இறந்தவர் ஒரு காணியில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளதுடன், அந்த காணியில் உள்ள தொழிலாளர் வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்தக் கொலை சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post