இலங்கையில் யூலை 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் மற்றுமொரு தடை..!

 இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.

இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை! | Children Banned From Begging From July Srilanka

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதற்கு மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் வீட்டு வேலைகள் உட்பட ஈடுபடுத்தல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டமைக்கு இணங்க தற்போது காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி இது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பாக சரளமாக தெளிவுப்படுத்தும் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post