இலங்கையில் சிறுமியை 11 வயது முதல் பலமுறை நாசம் செய்த இரு குடும்பஸ்தர்கள்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

 16 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

40 மற்றும் 42 வயதுடைய பசறை வெல்கொல்ல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பல வருடம் பாலியல் சித்திரவதை ; 16 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த இருவர் | 16 Year Old Girl Abused For Years Two Arrested

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியை 11 வயது முதல் இருவராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேக நபரை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post