பொலிஸ் நிலையத்தில் விவாகரத்து கேட்ட மனைவி-20 வயது கணவன் எடுத்த தவறான முடிவு-இலங்கையில் சம்பவம்..!

 பதுளை - எல்ல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமுற்ற கணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதுடைய கணவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் நிலையத்தில் விவாகரத்து கேட்ட மனைவி; தற்கொலைக்கு முயன்ற 20வயது கணவன் | Wife Seeks Divorce Police Station Husband Suicide

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்றதை அடுத்து விசாரணைகளுக்காக கணவரும் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது மனைவி பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

பின்னர் கணவர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த விஷ பானத்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து சுகயீனமுற்ற கணவரை தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்