செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
கடினமாக உழைத்தாலும், அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ரிஷபம்
taurus-rishibum
தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாக குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.
மிதுனம்
gemini-mithunum
மனதில் மகிழ்ச்சி பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசத்தை பொழிவார்கள். மனைவி காரியம் யாவினும் கை கொடுப்பாள். அதன் காரணமாகத் தன்னம்பிக்கை கூடும்.
கன்னி
virgo-kanni
உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை.
மகரம்
capricorn-magaram
விருப்பத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் எல்லாம், நேர்மாறாக நடக்கும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடக்கவும்.
கடகம்
cancer-kadagam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நஷ்டங்களை தவிர்க்க தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
சிம்மம்
leo-simmam
தங்கள் சம்பாத்திய நிலை எதிர்பார்த்ததை விட உயரும். அனைத்துச் செயல்களும் ஆத்ம திருப்தியுடன், அழகாக, எளிதாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.
துலாம்
libra-thulam
புதிய திட்டங்களால் வியாபாரத்தில் தன லாபம் அதிகரிக்கும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். வாகன யோகம் உண்டு. பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
தன லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி இணைந்து மகிழ்வர். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
தனுசு
sagittarius-thanusu
தீர்த்த யாத்திரைகள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனைவி கருத்தரித்தல் போன்று மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி காரணமாகத் தனலாபம், ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.