ஓய்வு தரும் ஞாயிறில் உங்கள் ராசிபலன் எப்படி..!{29.6.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. வயிற்று உபாதைகள் தொல்லை தரலாம். படுத்தவுடன் தூக்கம் வராது.
ரிஷபம்
taurus-rishibum
மனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
மிதுனம்
gemini-mithunum
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
கன்னி
virgo-kanni
பெண்களின் மூலம் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும் இனிய நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. ஆரோக்கியம் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் பெறும் நாள்.
மகரம்
capricorn-magaram
புதிய பயிற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூட, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
கடகம்
cancer-kadagam
கல்வியில் தேர்ச்சியும், புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். இனிய பயணங்கள் மன மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவால் சந்தோஷம் நிலவும்.
சிம்மம்
leo-simmam
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர் பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
துலாம்
libra-thulam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, இந்திர போகம் ஏற்படும் இனிய நாள்.
மீனம்
pisces-meenam
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. பயணத்தில் கவனம் தேவை. அனைவருடனும் சுமுகமாக, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். கணபதியை வணங்க கவலைகள் அகலும்.
தனுசு
sagittarius-thanusu
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். எவருக்கும் தீமை செய்யும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்கள் உணர்வுபூர்வமான சந்தோஷம் நிலவும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும், புதுப் பெண்கள் சினேகமும் உண்டாகும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post