யாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்..?

 

யாழில். லிப்ட் விபத்தில் அச்செழு திலக்சன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக திலக்சன் வயது  (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விடுதியில் பணியில் இருந்த போது , மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறிய போது , லிப்டினுள் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.