மரக்கறி கடையில் நடந்த கூத்து-வயல்வெளியால் தப்பி ஓடிய நபர்..!

 

நிந்தவூர் பிரதான வீதியில் இயங்கி வந்த ஒரு மரக்கறி கடையின் பின்னணியில் மறைவாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது, போலீசாரின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.


நேற்று (18) காலை, நிந்தவூர் போலீசாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் குறித்த கடையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர் தன்னை கைது செய்ய வந்ததை உணர்ந்து வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார். 

எனினும், புலனாய்வு பிரிவினரும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து கடும் சிரமத்துடன் அவரை பின்தொடர்ந்து பிடித்து கைது செய்தனர். 

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக  போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு .வருகின்றனர்