முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம். படகு மீட்பு. மீனவர் மாயம் தொடர்பில் சந்தேகம் {படங்கள்}

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது .


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

இன்று  (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடற்தொழிலுக்கு சென்றவேளை மீனவ படகு ஒன்று நடு கடலில் .
படகு தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளது. 

அதனையடுத்து தொழிலுக்கு சென்ற மீனவரின் உறவினர்களால்
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவரினை 8 படகுகளில் தேடும் பணியில் மீனவர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வின்சன்டிப்போல் அருமைராசா என்பரே நீரில் மாயமாகியுள்ளார்.

தற்போது கடந்த சில நாட்களாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்களால் சட்ட ரீதியாக தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றிருந்த வேளை இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மீனவ அமைப்புக்கள் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post