அநுராதபுரத்தில் துவக்குடன் சிக்கிய புளியங்குளவாசி..!

 

அநுராதபுரத்தில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அநுராதபுரத்தில் ஓயாமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் ஓயாமடுவ பொலிஸாரால் நேற்று(18) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

ஓயாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓயாமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.