காக்கை தீவுக்கு மீன் வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்-கதறி துடிக்கும் உறவுகள்..!

யாழ்ப்பாணத்தில் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சந்தையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post