சற்று முன் கிளிநொச்சியில் விபத்து-ஒருவர் கவலைக்கிடம்-வழிந்தோடும் எரிபொருள்..!

  

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து இன்று (26.06.2025) காலை ஏற்பட்டுள்ளது. 


யாழ். காங்கேசன்துறையில் இருந்து 33,000 - லீற்றர் கொள்கலனில் டீசல் கொண்டு சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்நிலையில், விபத்தின் போது கொள்கலனில் இருந்த எரிபொருள் கசிந்து விரயமாகியுள்ளது. 


அத்துடன், சாரதியின் உதவியாளர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.