வீட்டில் தாலி கட்டி ஒன்றாக குடும்பம் நடத்திய காதலர்கள்-பின்னர் நேர்ந்த விபரீதம்..!

 சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாந்து வந்த ஐ.டி., நிறுவன பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

திருச்சியைச் சேர்ந்த 26 வயதான நித்யா அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியில் இரு மாதங்களாக தங்கியிருந்தார்.

லிவிங் டூ கெதரால் பறிபோன பெண்ணின் உயிர் | Living Together Women Suicide Kodungaiyur

இவரும், கொடுங்கையூர், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த 28 வயதான பாலமுருகன் என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனர். பாலமுருகன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலையின்றி இருந்த நிலையில் நித்யா, அவருடன் லிவிங் டூ கெதர்' முறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், தன்னை பார்க்க பெற்றோர் வருவதாக கூறி, பாலமுருகனை வெளியிடத்தில் தங்க சொல்லியுள்ளார். அன்றிரவு, தன் வீட்டில் தங்கிய பாலமுருகன், நேற்று காலை நித்யா வீட்டிற்கு சென்றார்.

லிவிங் டூ கெதரால் பறிபோன பெண்ணின் உயிர் | Living Together Women Suicide Kodungaiyur

கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கை அறையில், மயங்கிய நிலையில் நித்யா கிடந்துள்ளார். படுக்கை அறையில் துாக்க மாத்திரைகள் கிடந்தன. இதுகுறித்து பாலமுருகன் பொலிசாருக்கு தகவல் அவ்ழங்கிய நிலையில், கொடுங்கையூர் போலீசார் சென்றனர்.

போலீசார் பரிசோதித்தபோது, நித்யா ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பாலமுருகனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிப்., 26ம் தேதி, அம்பத்துாரில் நித்யா தங்கியிருக்கும்போது, வீட்டில் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாக கூறியுள்ளார்

இந்நிலையில் பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.