அதிரடி தடை போட்ட பிரபல நாடு-அதிர்ச்சியில் நாய் இறைச்சி வெறியர்கள்..!
நாடு முழுவதும் நாய் இறைச்சியை நுகர்வுக்காக விற்பனை செய்வதை தென்கொரியா தடை செய்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய சட்டமூலம் 2024 ஆம் ஆண்டில் வரையப்பட்டு கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
நாய் இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த தொழில்துறையிலிருந்து வெளியேற 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த காலப்பகுதி போதாது என கூறியுள்ளனர்.
நாய் இறைச்சி உண்ணும் முக்கிய நாடாக மாறியுள்ள தென் கொரியா, 2027 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மனித நுகர்வுக்காக நாய்களை வளர்ப்பது, வெட்டுவது மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் கொரிய வோன் (சுமார் 22,800 டொலர்) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
நாய்இறைச்சியை உட்கொள்வது குற்றமாகக் கருதப்படாவிட்டாலும், அது தொடர்பான அனைத்து வணிக நடவடிக்கைகளும் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன.
தற்போதுள்ள நாய் இறைச்சி பண்ணைகள், இறைச்சி கூடங்கள் மற்றும் உணவகங்கள் மூன்று வருட மாற்ற காலத்திற்குள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும், மேலும் அவற்றின் நிலை மற்றும் மூடல் திட்டங்களை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ளன என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.