பரிதாபமாக பிரிந்த திறமையான மாணவின் உயிர்..?

 

இந்தியா  கன்னியாகுமரியை சேர்ந்த சக்தீஷ்வர் (17 வயது). இவர் பிளஸ்2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாரான நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார்.

எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்துள்ளார். அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல், பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது