சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 0.55% ஆல் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டாலும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கு அமைவாக எரிபொருள் விலை அவதானிக்கப்பட்ட பின்னர் புதிய பேருந்து கட்டண திருத்தம் 0.55% ஆல் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய பேருந்து கட்டணம் அமுலுக்கு வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.