மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, 2 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு நபர் மஹியங்கனை, சொரபோர பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உறவுக்கார சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 45 வயது
மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.