சற்று முன் மற்றுமொரு அரச பேரூந்து விபத்து-பயணிகளின் கதி..!

 

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (04) பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது. 

இந்த விபத்து காரணமாக, சிலாபம் - புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.