சற்று முன் பயங்கர விபத்து-கணவன் கண் முன்னே மனைவி நசுங்கி பலி..!{படங்கள்}

 

கினிகத்தேன பொலிஸ் பிரிவின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று(31)காலை  இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கொழும்பு 10, மொஹிதீன் மஸ்ஜித் சாலை A/6 ஐச் சேர்ந்த இக்ராம் மிஸ்கி மற்றும் அவரது மனைவி ஜனிரா இக்ராம் ஆகியோரே சிக்கியுள்ளனர்.

கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற BGK 3662 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மோட்டார் சைக்கிள், அதே வீதியில் பயணித்த CP.LJ 7026 என்ற பதிவு எண்ணைக் கொண்ட பாரவூர்தியை முந்திச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பாரவூர்தியின் பின் சக்கரத்தின் கீழ் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் இக்ராம் மிஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டு கினிகத்தேன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக கினிகத்தேன பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.