ஜப்பானின் ஷிமானே (Shimane)மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத் தீவிரத்தன்மை அளவுகோலின் படி (1 முதல் 7 வரை), இது 5 ஆம் நிலை கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:18 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 நிமிடங்களுக்குப் பின்னர், யசுகி (Yasugi) பிரதேசத்தில் நிலநடுக்கத் தீவிரத்தன்மை அளவுகோலில் 5 இற்கும் குறைந்த மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் தொடர்பில் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எவ்வித சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. எவ்வாறாயினும், பல பின்னதிர்வுகள் (aftershocks) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Notification texts go here... Link
Reach out!
