நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உடனடியாக வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
