சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் (48), அவரது மனைவி வகிதாபானு, மகன் அஜ்மல், மைத்துனர் சாதிக், மாமியார் ஹாபிராமா ஆகியோர் 5 பேரும் காரில் சென்றுள்ளனர். இந்த காரை அஜ்மல் ஓட்டிச் சென்றார். வாழப்பாடி அருகே சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
