குளிக்க சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; சம்பவத்தால் அதிர்ச்சி

Nila

 

களுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் களுத்துறை - இங்கிரிய, ஹைகம் (Raigam) மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஆற்றுக்குக் குளிக்கச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த இனந்தெரியாத கும்பல் அவரை வழிமறித்துள்ளது.இதன்போது, அவர்கள் மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த இரண்டு சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தோட்டப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.