பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடம் ஏறிய அநுர அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியின் பின்னர், பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்கப் போவதாக சூளுரைத்திருந்த அநுர அரசாங்கத்தின் பலமான அமைச்சுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அநுரவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைச்சில் 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் காணாமல் போயுள்ளது.இது இணையவழி தாக்குதல் காரணமாக மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்த போதும், அது உள்ளக ரீதியில் நடந்த பாரிய மோசடியாக வெளிவந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த மோசடி நடைபெற்ற போதும், அரசினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில், அது வெளியுலகிற்கு கசிந்துள்ளது.
இந்நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக நிதியமைச்சில் நிதி கையாள்கையுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
