அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

 

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் அலுவலகங்களும் இன்று (15) முதல் ஏப்ரல் 17ஆம் திகதி வரை வழக்கம் போல் செயற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. முன்னதாக, எரிபொருளைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்த மூன்று நாட்களிலும் அரச பணிகளை இணையவழி மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்களின் தேவைகளைத் திறம்படப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அரச அலுவலகங்களை வழக்கமான செயற்பாடுகளுக்காகத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட, பாடசாலைகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான புதன்கிழமை விசேட விடுமுறையை அரசாங்கம் முன்னதாக இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post