எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

 

உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில், "உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும்.மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்துப் பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post