கணவனை விட்டு காதலனுடன் ஓடிய மனைவி-மொத்த குடும்பமும் துடிதுடிக்க அரங்கேற்றிய கொடூரம்

கர்நாடகாவில் கணவனை விட்டுப் பிரிந்து காதலனுடன் ஓடிய இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து எரித்த குடும்பத்தினரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் வேறாருவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரின் தகாத உறவும் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. தவறான உறவு

இதனால் குறித்தபெண்ணை குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர். இருப்பினும் குறித்த பெண் தவறான பழக்கத்தை தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டு அவருடன் சென்று விட்டார். இதற்கிடையே மூன்று மாதங்களுக்குப் பிறகு குறித்த பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது. குடும்பத்தினர் பேச்சு வார்த்தைக்கு என அழைத்து சென்று சாதி வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி உறவை முறித்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரியவந்தது. ஆத்திரமடைந்த குடும்பத்தினர், ஒருகட்டத்தில் மகளைக் கொலை செய்து விடலாம் என தந்தை, அண்ணன், மைத்துனர் என ஒட்டுமொத்த குடும்பமும் கொடூர முடிவெடுத்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக விஷம் அருந்தச் செய்ததாகக் குறிப்பிடபட்டுள்ளது. இக்கொலையில் குற்றத்திற்கான தடயங்களை அழிக்கும் நோக்கில், அம்மூவரும் அப்பெண்ணின் உடலை அப்பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்தனர். கொல்லப்பட்ட அப்பெண்ணின் தாயார் அளித்த வாக்குமூலத்திலேயே கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவால் கணவனை விட்டு பிரித்த மகளை, பெற்ற தந்தையை மகனுடன் சேர்ந்து விஷம் குடிக்க வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post