இடுகைகள்

மனைவியை சுட்டே கொன்ற கணவன்-வெளியான காரணம்..!

 

மெதகம பகுதியில், கணவன் ஒருவரால் மனைவி சுட்டுப் படுகொலை  செய்யப்பட்டுள்ளார்.

மெதகம - பலகசர பகுதியில் நேற்று மாலை(14) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குடும்ப தராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பலகசர வீதிக்கு அருகே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்திருந்த பெண்ணை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பு அறிவித்துள்ளது. 

மெதகம - மக்கந்தவின்ன பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கணவனால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

பெண்ணின் சடலம்  தற்போது மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று்ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


 


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post