கார்த்திகை விரதம்-இன்றைய ராசிபலன்..!{16.8.2025}


 சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025

மேஷம்
aries-mesham
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியம் மேம்படும். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்ப்பது கிடைக்கும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூட துள்ளி எழும். நோய் நீங்கி சுகம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் மட்டுமே பதவி உயர்வும் கிடைக்கும். எதிலும் நிதானமாக நடக்க வேண்டிய சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.
மகரம்
capricorn-magaram
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
cancer-kadagam
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தனவரவு கூடும்.
சிம்மம்
leo-simmam
பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும்.. தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
பேச்சால் பெருமாளையும் அசத்தி விடுவார்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்கு கேட்கவேண்டுமா ? வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
நிம்மதி என்றால் என்ன என்று தேடவேண்டிய நிலை ஏற்படும். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இயலாமையால் அனைவரின் மேலும் ஒரு தேவையற்ற வெறுப்பு ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
பங்குச்சந்தை விவகாரங்களில் நாட்டம் ஏற்படும். எவ்வளவு நன்றாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. உங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
வம்பு செய்தவர் வழிவிட்டு ஒதுங்குவர். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும். அதற்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா முயற்சிகளிலும் எளிதில் வெற்றி கிட்டும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். குழந்தைகள் பால் அன்பைப் பொழிவார்கள். புதிய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post