மதுபான கடைகளுக்கும் விசேட விடுமுறை-பேரதிர்ச்சியில் குடிமகன்கள்

Sentamil Admin

 


தீபாவளி தினத்தன்று வடமாகாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தீபாவளியன்று (20.10.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தால் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அமைப்புக்களால், தீபாவளியன்று மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 17.10.2025