எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படும் ; நேற்று ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்



மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு முடிந்த அளவுக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், ஒரு "சிறிய அதிகரிப்பு" அவசியமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாவாகும். ஆனால், அரசாங்கம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்குவதால் நுகர்வோர் அதனை 382 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும், எரிபொருள் மானியத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் 60 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விலைத் திருத்தங்கள் அவசியமாகலாம். பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நாங்கள் சிறிய அளவிலான எரிபொருள் விலை அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும், இந்த விலை திருத்தம் எப்போது அமுல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஏப்ரல் 30-ஆம் திகதி எதிர்பார்க்கப்பட்ட மாத இறுதி எரிபொருள் விலை திருத்தம் நடைமுறைக்கு வராததை அடுத்து, இந்த கருத்துகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post